News March 17, 2024

BREAKING: 21 தமிழக மீனவர்கள் கைது

image

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் கைது தொடர் கதையாகி வருகிறது.

Similar News

News September 3, 2025

ஏலத்தில் இந்த வீரரை CSK வாங்கும்: அஸ்வின்

image

2026 ஐபிஎல் ஏலத்தில் CSK அணி டிம் சீஃபர்ட்டை வாங்கும் என அஸ்வின் கணித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் அவர், CSK அணியில் கான்வே அல்லது ரச்சின் தொடரவில்லை என்றால் தொடக்க வீரராக டிம் சீஃபர்ட்டை ஏலத்தில் வாங்க கூடும் என்றார். ஒரு வேளை CSK அவரை வாங்க தவறினால், வேறு அணிகள் அவரை நிச்சயம் வாங்க கூடும் என அஸ்வின் தெரிவித்தார். டிம் சீஃபர்ட் சமீபத்தில் CPL-ல் 53 பந்தில் 125 ரன்கள் குவித்திருந்தார்.

News September 3, 2025

சாதிப் பெருமை பேசினால் முதலாளியாக முடியாது: திருமா

image

அம்பானி, அதானிக்காக பாஜக அரசு பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். நமது இளைஞர்கள் சாதிப் பெருமை பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் எனவும், அவர்களால் கார்ப்பரேட் முதலாளியாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பால் அம்பானியோ, அதானியோ பாதிக்கப்பட போவதில்லை, மாறாக சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

விரைவில் நல்ல செய்தி: FM நிர்மலா சீதாராமன்

image

அமெரிக்காவின் 50% விரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என FM நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண டெல்லியில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார். மேலும் இந்த விஷயத்தில், ஏற்றுமதி செய்யும் அனைவருக்கும் மத்திய அரசிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று FM தெரிவித்தார்.

error: Content is protected !!