News September 14, 2025
BREAKING: அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகிறது

TN-ல் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகும் என கூறியுள்ளனர். நடப்பாண்டில் அக்டோபர் 3-வது வாரத்தில் பருவமழை தொடங்கி, ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக பருவமழைக்கு முன்பு வடிகால் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள ரெடியா?
Similar News
News September 14, 2025
EPS கையெழுத்திட்டதில் கால்வாசி கூட வரவில்லை: CM

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் பாதிகூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி அரசு நிகழ்வில் பேசிய அவர், EPS கையெழுத்திட்ட முதலீடுகளில் கால்வாசி கூட வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால், திமுக ஆட்சி அமைந்தபிறகு ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 77% செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
News September 14, 2025
பீர் பிரியர்கள் கவனத்திற்கு..

மதுபானம் அருந்திய பிறகு ஏற்படும் உடல் வாசனை மாற்றங்களால், பீர் குடிப்பவர்கள் கொசுக்களை ஈர்க்கும் வாய்ப்பு 1.35 மடங்கு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலை., 1000 கொசுக்கள், 500 மனிதர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில், பீர் அருந்திய பிறகு ஏற்படும் உடல் வியர்வை மூலம் 100 மீட்டர் தொலைவிலும் மனித வாசனையை கொசுக்களால் உணர முடியுமாம். உஷாரா இருங்க!
News September 14, 2025
இளையராஜாவை ’சாமி’ என ரஜினி அழைப்பது ஏன்?

இசைஞானி இளையராஜாவை மேடைகளில் ’சாமி’ என அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ள நடிகர் ரஜினி அதற்கான காரணத்தை வெளிபடுத்தியுள்ளார். ஆரம்பகாலத்தில் பேண்ட் சட்டை என சாதாரணமாக இருந்த இளையராஜா, திடீரென ஒருநாள் வெள்ளை வேட்டி கட்டி, ருத்ராட்சம் அணிந்து வந்தார் எனவும், அவரை பார்த்தவுடன் தான் சாமி என அழைத்ததாகவும் இளையராஜா 50 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.