News February 22, 2026
BREAKING: 2 அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி

<<19105647>>துரைமுருகனை <<>>தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால், கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாள்களாக தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிய CM நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 26, 2026
உஷாரா இருங்க.. தமிழக காவல்துறை எச்சரிக்கை!

சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் உங்களுக்கு வரும் OTP, ATM Pin, UPI ID & வங்கி கணக்கின் எந்த ஒரு தகவலையும் யாரிடமும் பகிர வேண்டாம் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய எந்த ஒரு லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. ஏதாவது சைபர் மோசடியில் சிக்கினால் ‘1930’ என்ற நம்பருக்கு அழைக்கவும். இந்த விழிப்புணர்வு பதிவை அனைவருக்கும் பகிரவும்.
News February 26, 2026
விஜய் – ரஷ்மிகா திருமண விருந்தில் பன்றி கறி!

<<19242357>>விஜய் – ரஷ்மிகா<<>> திருமண விருந்தின் மெனு வெளிவந்துள்ளது. தெலுங்கானா ஸ்டைல் மட்டன் பிரியாணி, ஹைதராபாத் தம் பிரியாணி, நாட்டுக்கோழி குழம்பு, புளி ரசம் ஆகியவை பரிமாறப்பட்டுள்ளன. மேலும், கர்நாடகா பிசிபேலே பாத், பன்றி கறி, மைசூர் பாக் விருந்தினர்களால் சுடச்சுட ருசிக்கப்பட்டதாம். ‘குடகு’ பாரம்பரியத்தில் பன்றிக் கறி உட்கொள்வது வழக்கம் என்றும், அது தனக்கு பிடிக்கும் என ரஷ்மிகா முன்னர் கூறியுள்ளார்.
News February 26, 2026
புதிய ரேஷன் கார்டுகள்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

TN-ல் 2021 முதல் தற்போது வரை 21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல், கள்ளிமந்தையத்தில் பேசிய அவர், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முன்னதாக, 2025 டிசம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு Smart Card வழங்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.


