News October 16, 2025

குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா

image

குஜராத்தை ஆளும் பாஜக அரசின் 16 அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை CM பூபேந்திர படேலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக CM பூபேந்திர படேல், இன்றிரவு ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். புதிய அமைச்சரவையில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News October 16, 2025

TTF வாசனுக்கு திருமணம்❤️❤️ மனைவி இவர்தான்.. PHOTO

image

யூடியூபரும் நடிகருமான TTF வாசன், கடந்த செப்டம்பரில் தனது மாமா மகளை திருமணம் செய்ததாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டாலும், அதில் மணப்பெண்ணின் முகம் எமோஜிகளால் மறைத்த படியே இருந்தது. இந்நிலையில், முதல்முறையாக தனது காதல் மனைவியின் முகத்தை Reveal செய்துள்ளார் வாசன். இந்த ஜோடியை பார்த்த நெட்டிசன்கள், லைக்ஸ் போட்டு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

News October 16, 2025

தீபாவளிக்கு மொறு மொறு முறுக்கு ரெசிபி!

image

தீபாவளிக்கு முறுக்கு ருசிக்காவிட்டால் , பண்டிகை என்ற திருப்தியே கிடைக்காது. எண்ணெய் குடிக்காமல், மொறு மொறு முறுக்கு செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். பொருள்கள்: பச்சரிசி, உளுந்து, எள், பொறி கடலை, வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர், கடலை எண்ணெய். செய்முறையை SWIPE செய்து பார்க்கவும்.

News October 16, 2025

டிஜிட்டல் அரஸ்ட்: முதியவரிடம் ₹58 கோடி மோசடி

image

வசதிபடைத்த முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. சமீபத்தில் மும்பையில் வசிக்கும் 72 வயது தொழிலதிபருக்கு சிபிஐ பெயரில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் நீங்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக, போலி ஆவணங்களை காட்டி மிரட்டி ₹58 கோடியை பறித்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த காவல்துறை, முக்கிய குற்றவாளிகளை தேடி வருகிறது. மக்களே உஷார்

error: Content is protected !!