News January 6, 2025
BREAKING: பொங்கலுக்கு 14,104 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் செல்வார்கள் என்பதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க 14,104 சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Similar News
News September 16, 2025
மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.
News September 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 16, ஆவணி 31 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 AM – 4:30 AM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News September 16, 2025
பணியிட அவமானத்தால் தற்கொலை: ₹90 கோடி இழப்பீடு

பணியிடத்தில் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் ₹90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பான் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் சடோமி (25) என்ற பெண்ணை, நிறுவன தலைவர் தெரு நாய் என கூறி அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிய, கோமாவில் இருந்த அவர் 2023-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் கோர்ட்டை அணுகினர்.