News March 20, 2025
BREAKING: இந்திய அணிக்கு ₹58 கோடி பரிசு

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு BCCI ₹58 கோடி பரிசை அறிவித்துள்ளது. வீரர்கள், தேர்வுக்குழு, பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்த பணம் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. ICC கோப்பைகளை அடுத்தடுத்து வெல்வது அணியினரின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக BCCI பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. முன்னதாக, CT கோப்பையை வென்றதற்காக ICC சார்பில் இந்திய அணிக்கு ₹19.53 கோடி பரிசு வழங்கப்பட்டது.
Similar News
News March 21, 2025
அபாய சங்கிலியில் தொங்கிய பை.. என்னடா இது?

ரயில் பயணத்தில் வட மாநிலத்தவர் பண்ணும் அட்டகாசத்துக்கு எல்லையே இல்லை. அப்படி ஒரு சம்பவம் சென்னையில நடந்திருக்கு. ரயிலின் அபாயச் சங்கிலியில் வட மாநில இளைஞர் ஒருவர் பையை தொங்கவிட்டுள்ளார். இதனால் ஆந்திராவிற்கு சென்ற ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நின்றது. இதனால் ரயில்வே கேட்டில் காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் அவதி அடைந்தனர்.
News March 21, 2025
CM, MLA-க்கள் சம்பளம் இரட்டிப்பாக உயரப்போகுது…!

கர்நாடக சட்டப்பேரவை பிரதிநிதிகளின் ஊதியத்தை இரட்டிப்பாக்கும் மசோதா நாளை கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அம்மாநில முதல்வருக்கு மாத சம்பளமாக ரூ.1.5 லட்சம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர்களுக்கு தலா 1.25 லட்சம், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.80,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 21, 2025
2600 பேர் நிர்வாணமாக… 11 நாட்கள்

அமெரிக்காவில் ஆச்சரியங்களுக்கு அளவில்லை. nude cruise எனப்படும் நிர்வாண சொகுசுக் கப்பல் பயணமும் அதிலொன்று. அடுத்த ஆண்டு, பிப்.9-ம் தேதி, Norwegian Pearl கப்பலில் தொடங்கும் 11 நாள் பயணத்தில் 2300 பேர் பங்கேற்பர். நிர்வாணமாக சென்றாலும், இப்பயணத்தில் ஆபாசமாக நடந்துகொள்ளவோ, சுகாதாரமற்ற செயல்பாடுகளுக்கோ அனுமதி இல்லை. ட்ரிப்புக்கு கட்டணம் சாதாரண டிக்கெட்: ₹1,72,000. டீலக்ஸ் கட்டணம்: ₹28,53,657 மட்டுமே.