News March 22, 2026
BREAKING: வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் அறிவித்துள்ளார். லாஸ்பேட்டை-சாமிநாதன், காரைக்கால் தெற்கு-அசனா, நெட்டப்பாக்கம்- பெரியசாமி, முத்தியால்பேட்டை-பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகிய Ex அமைச்சர் சாய் சரவணனுக்கு திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
தங்கம் விலை.. காலையிலேயே கொடுத்த சர்ப்ரைஸ்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 66 டாலர்கள் குறைந்து 4,609-க்கும், வெள்ளி விலை 1 அவுன்ஸ் 1 டாலர் குறைந்து 72 டாலர்களுக்கும் விற்பனையாகிறது. இதே நிலை தொடர்ந்தால், நம்மூர் சந்தையில் காலை 9 மணிக்கு தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த 3 நாள்களாக தங்கம் விலை சவரனுக்கு ₹2,320 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
விஜய்யை திமுகதான் முன்னிறுத்துகிறது: கோயல்

தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்று, அடுத்த ஆட்சியை NDA கூட்டணி அமைக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்தார். கன்னியாகுமரியில் பேசிய அவர், மாநில மக்கள் தங்களை தோற்கடிக்கப் போகிறார்கள் என்பதையும் திமுக உணர்ந்துவிட்டது என்றார். இதனால் விஜய்யை முன்னிறுத்துவதன் மூலம், திமுக எதிர்ப்பு வாக்குகளையும் மக்களின் கோபத்தையும் பிளவுபடுத்த திமுக முயற்சி செய்கிறது எனவும் விமர்சித்தார்.
News April 6, 2026
சமூகநீதி பேசுவதற்கு மட்டும் அல்ல: மாணிக்கம் தாகூர்

மதுரை மேலூர் பொது தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த Ex MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, சமூகநீதி பேசுவது மட்டும் அல்ல.. வாய்ப்பு கொடுப்பதில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் அதை நிரூபித்து உள்ளது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதன்மூலம் காங்கிரஸை பாராட்டுகிறாரா அல்லது திமுகவை சாடியுள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


