News April 5, 2026

BREAKING: வெள்ளியங்கிரியில் அடுத்தடுத்து இருவர் பலி

image

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மதுரையைச் சேர்ந்த சீனிவாசன்(48) நேற்று உயிரிழந்தார். முன்னதாக நேற்று அதிகாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன்(35) உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்த இந்த மரணங்கள் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மலையேறும் பக்தர்கள் போதிய மருத்துவ பரிசோதனைக்குப் பின் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Similar News

News April 6, 2026

கோவை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

கோவை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச்-2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

மேட்டுப்பாளையம்: கூலித் தொழிலாளி பரிதாப பலி

image

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் கூலி வேலை பார்த்த மூர்த்தி (45) என்பவர், தென்னை மட்டைகளைச் சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!