News March 12, 2026

BREAKING: வீட்டு சிலிண்டர்.. மக்களுக்கு மேலும் அதிர்ச்சி

image

கிராமப்புற மக்களுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறையே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் 25 நாள்களுக்கு ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 40,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News April 6, 2026

நெருக்கடிகளை முறியடிக்கும் இந்தியா: ஜெய்சங்கர்

image

உலகளவில் பல நெருக்​கடிகளை இந்​தியா முறியடித்து முன்​னேறி வரு​வதாக ஜெய்சங்கர் கூறினார். உலக அரசி​யல் மாறு​வதற்கு ஏற்ப, சில நாடு​களால் தங்​களை மாற்றிகொள்ள முடிய​வில்​லை என்ற அவர், பல நாடுகள் நிலைத்தன்மைக்காக பாது​காப்​புக்​காக போராடி வரு​வதாக பேசினார். ஆனால், எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நம்பிக்கை இந்தியாவிடம் இருப்பதாகவும், 10 ஆண்டுகளாக சிறப்பான நிர்வாகம் இருந்ததே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

News April 6, 2026

BREAKING: நடிகை சுபாஷினி தற்கொலை

image

சென்னை, ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடிகை சுபாஷினி(36) தற்கொலை செய்துகொண்டார். பிரபலமான ‘கயல்’ சீரியல் மற்றும் சில படங்களில் நடித்து வரும் இவர் இலங்கையை சேர்ந்தவராவார். கணவருடன் பெங்களூருவில் வசித்து வரும் இவர், போரூரில் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தபோது இந்த முடிவை எடுத்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #RIP

News April 6, 2026

ஈரான் மீது USA அணுகுண்டு வீசினால் என்ன ஆகும்?

image

ஒருவேளை ஈரான் மீது USA அணுகுண்டு வீசினால், வீசிய 10 வினாடியில் அந்நாடே தரைமட்டமாகிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் தாக்கம் 50 கி.மீ வரை பரவி, மக்கள் தீயில் கருகிவிடுவார்கள். சுமார் 50 லட்சம் டன் கரியமில வாயு புகை விண்ணில் எழுந்து சூரிய ஒளியை தடுக்கும். இதனால் புவி வெப்பம் குறைந்து, அமில மழை பொழியலாம். விவசாயம் அழிந்து, துருக்கி, PAK என அருகிலுள்ள நாடுகள் பஞ்சத்தில் வாடும். #போர்_வேண்டாம்

error: Content is protected !!