News March 7, 2026
BREAKING: விவாகரத்து சர்ச்சை.. விஜய்க்கு ஆதரவு

சங்கீதா விவாகரத்து விவகாரம் தமிழக அரசியல் களத்திலும் எதிரொலித்துள்ளது. விஜய்க்கு எதிராக SM-ல் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். விவாகரத்து விவகாரம் மூலம் விஜய்யின் இமேஜை கெடுக்க திமுக முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவை சிறுமைப்படுத்த முயன்றது போலவே, விஜய் விவகாரத்திலும் திமுக முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.
Similar News
News March 12, 2026
BREAKING: வீட்டு சிலிண்டர்.. மக்களுக்கு மேலும் அதிர்ச்சி

கிராமப்புற மக்களுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறையே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் 25 நாள்களுக்கு ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 40,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 12, 2026
திமுக அரசை கண்டித்து 17-ம் தேதி NDA போராட்டம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்க திமுக அரசு தவறிவிட்டதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். இதை கண்டித்து, வரும் 17-ம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், NDA-வில் உள்ள கட்சிகள் இணைந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<19360806>>பாலியல் குற்றவாளிகளை<<>> திமுக அரசு பாதுகாப்பதாக EPS குற்றம்சாட்டியிருந்தார்.
News March 12, 2026
வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு செல்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


