News August 8, 2025
BREAKING: விழுப்புரத்தை உலுக்கிய சம்பவம்

விழுப்புரத்தில் 8-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தமுமுக வர்த்தக அணி மாநில பொருளாளர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்துல் ஹக்கீம் நடத்தி வந்த உரக் கம்பெனியில் பணிபுரிந்த பெண்களுக்கு ஆபாசமாக செய்திகள் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெண்களில் உறவினர்கள் அப்துல் ஹக்கீமின் உரக் கம்பெனியை அடித்து நொறுக்கினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
News August 8, 2025
பௌர்ணமியையொட்டி தி.மலைக்கு சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (ஆக.9) காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் நாளை (ஆக.9) பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News August 8, 2025
தமிழ்நாடு அரசு அச்சுத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள ஜூனியர் பைண்டிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன. எனவே சம்பளம்: ரூ.19,500/- முதல். தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும், பணியிடம்: தமிழ்நாடு கடைசி நாள்: 29.08.2025
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.