News January 7, 2026
BREAKING: விலை ₹6,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாலையில் குறைந்துள்ளது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹12, கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. ஆனால், மாலையில் கிராமுக்கு ₹6 குறைந்து ₹277-க்கும், கிலோவுக்கு ₹6,000 குறைந்து ₹2,77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்குமுகத்தில் இருப்பதால், நம்மூரிலும் நாளை விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News January 22, 2026
ஜனவரி 22: வரலாற்றில் இன்று

*1901 – ராணி விக்டோரியா (1819-1901) காலமானார். *1947 – இந்திய அரசியலமைப்பின் வரைவு குறித்த தீர்மானத்தை அரசியலமைப்புச் சபை அங்கீகரித்தது. *1963 – டேராடூனில் ‘பார்வையற்றோருக்கான தேசிய நூலகம்’ நிறுவப்பட்டது. * 2001 – ஐஎன்எஸ் மும்பை என்ற ஏவுகணை தாங்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. *2009 – ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
News January 22, 2026
டிஜிட்டல் கைது என மிரட்டி ₹16 லட்சம் கொள்ளை

மும்பையைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த மாதம் 11-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய மோசடி கும்பல், டெல்லி குண்டுவெடிப்பு நடத்தியவர்களுடன் அவருக்கு தொடர் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து முதியவர் வங்கி கணக்கிற்கு ₹7 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். பின்னர், அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி, அவரிடமிருந்து ₹16 லட்சம் பறித்துள்ளனர்.
News January 22, 2026
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விரைவில் புதிய அம்சம்!

பிரபல கிளவுட் சேவையான Google Photos-ஐ பயன்படுத்தும்போது, பின்னணியில் நிகழும் sync காரணமாக போனில் சார்ஜ் வேகமாக குறைகிறது. இதனை சரிசெய்ய விரைவில் கூகுள் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். போனின் பேட்டரி நிலைக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக இயங்கும்.


