News September 9, 2025
BREAKING விருதுநகர் மக்களை சந்திக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.11 அன்று தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
விருதுநகர்: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

விருதுநகர் மக்களே, <
News March 3, 2026
ராஜபாளையத்தில் மீண்டும் போட்டியிட திமுக MLA விருப்பம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலையில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். உடன் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News March 3, 2026
சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது குடி பழக்கத்தால் சில தினங்களுக்கு முன் தகராறு எழுந்துள்ளது. இதனால் அவர் மனைவி, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் விருதுநகர் G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.


