News January 10, 2026

BREAKING: விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.. அறிவிப்பு

image

சென்சார் பிரச்னையால், ‘ஜனநாயகன்’ படம் பொங்கலுக்கு வருமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், விஜய் நடித்த ‘தெறி’ படம் பொங்கலையொட்டி ஜன.15-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜனநாயகனுக்கு பதில் தெறி வெளியாவதால், விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

Similar News

News February 2, 2026

அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்!

image

அத்திப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. நன்மைகள்: *உடலில் செரிமான அமைப்பு பலப்படுவதால் மலச்சிக்கல், வாயு தொல்லை ஏற்படாது * நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடை இழப்புக்கு உதவுகிறது *ரத்த சோகைக்கு தீர்வு *ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருப்பதால் சருமத்திற்கும் நல்லது

News February 2, 2026

கூட்டணி விஷயத்தில் தவிக்கும் ராமதாஸ்

image

NDA-வில் இணைய அன்புமணி முட்டுக்கட்டை போடுவதால், ராமதாஸ் தரப்பு பாமக திமுக கூட்டணியில் இணையலாம் என பேசப்பட்டது. ஆனால், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என திருமா கூறியதால், ராமதாஸ் தரப்பு பாமகவுடன் கூட்டணிப் பேச்சை திமுக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. தவெகவுடன் கூட்டணி இல்லை என காந்திமதி தெரிவித்திருந்தார். இதனால், எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் ராமதாஸ் தவிக்கிறாராம்.

News February 2, 2026

பிப்ரவரி 2: வரலாற்றில் இன்று

image

*உலக சதுப்பு நில நாள் *1896 – சுதந்திர போராட்ட வீரர் வெ.அ.சுந்தரம் பிறந்தநாள் *2010 – நடிகர் ஹனீஃபா நினைவு நாள் *2023 – நடிகர் கே. விஸ்வநாத் நினைவு நாள்

error: Content is protected !!