News December 28, 2025
BREAKING: விஜய் கீழே விழுந்தார்… பதற்றம் உருவானது

மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த விஜய்க்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேசமயம் அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் விஜய் கூட்டத்தில் சிக்கி திணறினார். பாதுகாவலர்கள் அவரை காரின் அருகே அழைத்து சென்றபோது கட்டுக்கடங்காத கூட்டத்தால் விஜய் தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக விஜய் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Similar News
News December 29, 2025
மும்பை மாநகராட்சி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தாராவியை சேர்ந்த தமிழ்ப் பெண் மஞ்சுளா கதிர்வேல் வேட்பாளராக களமிறங்குகிறார். MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்தல் நடக்கிறது. மும்பையின் 227 வார்டுகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மஞ்சுளா உட்பட 15 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் நிறைந்த மும்பை மாநகராட்சிக்கு சில நல்லவர்கள் தேவை என்றும் கூறியுள்ளது.
News December 29, 2025
5 குழந்தைகள் குத்திக் கொலை

தெற்கு அமெரிக்க நாடான சூரினாமின் Paramaribo-வில், மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே இரவில் 5 குழந்தைகள் உள்பட 9 பேர் மிக கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த முழுவிவரம் வெளியாகவில்லை. இதில் படுகாயமடைந்த வேறு சில நபர்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். So sad!
News December 29, 2025
மைக்கில் தொடங்கிய அப்பா – மகன் சண்டை

2024, டிச.28-ல் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் மைக்கை டேபிளில் எறிந்தார் அன்புமணி. அன்றிலிருந்து அப்பா – மகனுக்கிடையேயான அரசியல் இடைவெளி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. உச்சமாக நடப்பாண்டு ஏப்ரலில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, தானே பாமகவின் தலைவர் என ராமதாஸ் அறிவித்தார். கட்சி தலைவர் அன்புமணி தான் என ECI அங்கீகரித்துள்ள நிலையில், ராமதாஸ் சட்ட போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்.


