News December 20, 2025
BREAKING: விஜய் கட்சியில் அதிரடி நீக்கம்

தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் கட்சி பதவியை பறித்து புஸ்ஸி ஆனந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெகவில் பதவி வழங்குவதாகக் கூறி பெண் நிர்வாகியிடம் செந்தில்நாதன் தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று SM-ல் வைரலாகி வருவது கவனிக்கத்தக்கது.
Similar News
News December 25, 2025
திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்து: அண்ணாமலை

திட்டக்குடியில் <<18664505>>அரசு பஸ்<<>> மோதி 9 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளித்ததாக அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அரசு பஸ்கள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. பஸ்களின் பராமரிப்பு, டிரைவர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகளில் திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இத்தகைய தொடர் விபத்துக்கள். இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 25, 2025
டைட்டானிக் நாயகி அவதாரில் கின்னஸ் சாதனை!

‘Avatar: The Way of Water’ படப்பிடிப்பின் போது, நீருக்கடியிலான காட்சிகளில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், கேட் வின்ஸ்லெட், 7.15 நிமிடங்கள் மூச்சை அடக்கி நடித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். ‘மிஷன் இம்பாசிபிள்’-க்காக டாம் குரூஸ் 6 நிமிடங்கள் மூச்சை அடக்கி நடித்த சாதனையை முறியடித்தார். அவதார் 3-ம் பாகத்திலும் கேட் நடிப்பில் அசத்தியுள்ள நிலையில், இந்த ரெக்கார்ட் தற்போது டிரெண்டாகி வருகிறது.
News December 25, 2025
BREAKING: நாளை முதல்.. அரசு வெளியிட்டது

ரயில் கட்டண உயர்வு நாளை(டிச.26) முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சாதாரண வகுப்புகளில் 215 km வரை விலை மாற்றமில்லை. 215 கிமீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 பைசா அதிகரிக்கும். மேலும், மெயில்& AC இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 பைசா அதிகரிக்க உள்ளது. 500 கிலோ மீட்டர்களுக்கு AC இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ₹10 அதிகமாகும்.


