News January 19, 2026
BREAKING: விஜய் அடுத்த அதிரடி

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை மேலும் 20 நாள்கள் நீட்டிக்கக்கோரி, விஜய் உத்தரவின்பேரில் தவெக தரப்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18-ம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையை சுட்டிக்காட்டி, அவகாசத்தை நீட்டிக்க தவெக வலியுறுத்தியுள்ளது.
Similar News
News April 5, 2026
தினமும் சிக்கன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் அளவோடும், அதிக மசாலாக்கள் இல்லாமலும் சிக்கன் சாப்பிடுவது நல்லதுதான் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதனால் சில நன்மைகளும் உள்ளன.
*எலும்புகள் வலுப்பெறும்.
*நினைவாற்றல் மேம்படும்.
*உடல்சோர்வை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும்.
*இதய நோய்களை குறைக்கும்.
*ஆரோக்கியமான கருவுறுதல் & தரமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும். *பெருங்குடல் புற்றுநோய் அபாயம் குறையும். ஷேர் பண்ணுங்க.
News April 5, 2026
அதிமுகவில் பலர் அதிருப்தி.. செங்கோட்டையன் பரபரப்பு

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் பலர் கட்சி மாற தயாராகி வருவதாக செங்கோட்டையன் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். கோபியில் பேசிய அவர், அதிமுகவில் பணம் கட்டிய பலருக்கு சீட்டு தேர்தலில் சீட் தராமல் EPS நாமத்தை கொடுத்துவிட்டார் என்றார். மேலும், கோபிசெட்டிபாளையத்தில் தன்னை நடுத்தெருவில் நிறுத்துவேன் எனக் கூறிய மா.செ., AK செல்வராஜ் தற்போது சீட் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார் என சாடியுள்ளார்.
News April 5, 2026
இது இயேசுவின் வழிக்கு முரணானது: போப்

போரில் USA வெற்றிபெற மக்கள் பிரார்த்திக்க வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியிருந்தார். இந்நிலையில், ஈஸ்டர் திருநாளான வாடிகன் தேவாலயத்தில் பேசிய போப், இதனை கண்டித்துள்ளார். போரை மதரீதியாக இணைப்பது இயேசுவின் வழிக்கு முரணானது என அவர் கடிந்துகொண்டார். மேலும் போரை கைவிட்டு, அமைதி, சமாதானம், மதநல்லிணக்கத்துடன் உலகம் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


