News January 12, 2026

BREAKING: விஜய்யை தொடர்ந்து எதிர்பாராத Twist

image

கரூர் துயர சம்பவம் தொடர்பாக CBI அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்பார்க்காத விதமாக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் சற்றுமுன் அங்கு ஆஜராகியுள்ளார். விஜய் பதில் அளித்த பின்பு, தேவாசீர்வாதமிடமும் விசாரணை நடைபெறவிருக்கிறது. தவெக- போலீஸ் தரப்புக்கு இடையே முரண்பட்ட கருத்து இருக்கிறதா என்பதை CBI ஆய்வு செய்யும்.

Similar News

News January 30, 2026

BREAKING: H.ராஜா மருத்துவமனையில் அனுமதி

image

பாஜக மூத்த தலைவர் H.ராஜா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அவரின் உடல்நலம் குறித்து அப்போலோ ஹாஸ்பிடல் தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

News January 30, 2026

குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

image

குழந்தைகள் பலரும் இளம் வயதிலேயே போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இப்பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க ✦பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன் உபயோகத்தை குறையுங்க. பெற்றோர் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ✦குழந்தைகளை வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் ✦ஏதாவது கலைத் திறனில் அவர்களை ஈடுபடுத்துங்க.

News January 30, 2026

சண்டையில் சாவு என சொல்வது குற்றமில்லை.. கேரள HC தீர்ப்பு

image

சண்டையின்போது ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கேரள HC தீர்ப்பளித்துள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கோபத்தில் செத்து போ என்று கூறியதால், பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்துள்ளது.

error: Content is protected !!