News January 20, 2026
BREAKING: விஜய்யின் அடுத்த முக்கிய முடிவு

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் நேற்றும் CBI கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இதனிடையே, விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தவறான தகவல் என CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வராமல், கரூர் வழக்கை சட்ட வல்லுநர்களுடன் கையாள விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 28, 2026
தேர்தல் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் விருதுநகர்!

தமிழக தேர்தல் வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இம்மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் மறைந்த காமராஜர் முதல்வரானது 1957-ல் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று தான். அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வென்று தான் முத்துராமலிங்கனார் MP ஆனார். அதேபோன்று 1977-ல் அருப்புக்கோட்டை தொகுதியில் வென்று தான் எம்ஜிஆர் முதல்வராக தேர்வானார்.
News January 28, 2026
இனி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி எளிது: நயினார்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கிய மைல்கல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் 99% இந்தியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்கப்படும். TN இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஜவுளி, தோல், மின்னணு பொருட்கள் ஆகியவை TN-லிருந்து ஏற்றுமதி செய்வது எளிதாகும் எனவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
ஜனவரி 28: வரலாற்றில் இன்று

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. 1933 – பாகிஸ்தான் என்ற பெயர் சௌத்ரி ரஹ்மத் அலியால் உருவாக்கப்பட்டது. 1865 – இந்திய சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த தினம். 1986 – நடிகை ஸ்ருதி ஹாசன் பிறந்த தினம். 1997- சிறுபான்மையின சமூக ஆர்வலர் பழனி பாபா நினைவு தினம்.


