News January 8, 2026
BREAKING: விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு.. திமுக அதிர்ச்சி

சில நாள்களாகவே ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சினர் பேசி வருவதால், காங்.,- திமுக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இதன் பின்னணியில், காங்., தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயகன் விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கிரிஷ் ஷோடங்கர், விஜய் வசந்த் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது இதை உறுதிப்படுத்துகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News January 29, 2026
6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு தருவதாக ஆசைக்காட்டி சிறுமியின் மறைந்த சகோதரனின் 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று நண்பர்கள் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்கள் கைதான நிலையில், 3-வது சிறுவனும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
News January 29, 2026
ஜனவரி 29: வரலாற்றில் இன்று

*1939- சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். *1780 – இந்தியாவின் முதல் செய்தித்தாளான ஹிக்கியின் பெங்கால் கெஜட் தொடங்கப்பட்டது. 1953- ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு இந்திய ஏர்லைன்ஸ் உருவானது. *1970 – இந்திய துப்பாக்கிச்சூடு வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்ததினம். *2009 – ஈழத்தமிழர்களுக்காக தனக்குத்தானே தீயிட்டு உயிர்மாய்த்த முத்துக்குமார் நினைவுதினம்.
News January 29, 2026
இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து படைத்த சாதனை!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சில முக்கிய சாதனைகளை நியூசி., படைத்துள்ளது. அதன்படி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. டி20-யில் பலம் வாய்ந்த இந்திய அணியை அதிக முறை (5) இலக்கை எட்டவிடாமல் தடுத்து முதலிடம். மேலும் செப். 2023 முதல் 13 போட்டிகளுக்கு பிறகு நியூசி. முதல் வெற்றி பெற்றுள்ளது.


