News March 24, 2026

BREAKING: விசிக தனித்து போட்டி.. திருமா அறிவித்தார்

image

புதுச்சேரி தேர்தலில் விசிக தனித்து போட்டியிட உள்ளதாக திருமா அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு தொகுதியுடன் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விசிக இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், விசிகவுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக, காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுவதாக திருமா அறிவித்துள்ளார்.

Similar News

News March 27, 2026

இரட்டை இலை சின்னத்தில் போட்டி: பூவை ஜெகன்மூர்த்தி

image

NDA கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி நீடிப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கூடுதல் தொகுதிகள் கேட்டபோது, ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என அதிமுக தலைமை ஆறுதல் தெரிவித்தது. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை ஏற்கிறோம்; வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நானே போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

நகைக் கடன் தள்ளுபடி.. வந்தாச்சு UPDATE

image

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இதில், முந்தைய தேர்தலைப் போன்று இம்முறையும் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த முறையை போன்று 5 சவரன் வரை தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.

News March 27, 2026

மாநில அரசியலில் கால்பதிப்பாரா கனிமொழி?

image

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் திமுக மும்முரமாக உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி MP-யான கனிமொழியை வரும் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என நெல்லை – தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகளிர் உரிமைகள், பெண்களின் நலனுக்கான சிறந்த அரசியல் தலைவராக அவர் விளங்குவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.<<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!