News March 8, 2026

BREAKING: வரும் 12-ம் தேதி தவெக போராட்டம்

image

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய், அரசியல் ரீதியாக அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட, மா.செ.க்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் விஜய், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 14, 2026

வங்கி கணக்கில் ₹5,000 வரும்.. அரசின் அசத்தல் திட்டம்

image

போஸ்ட் ஆபிஸில் MIS (மாதாந்திர முதலீட்டு திட்டம்) மூலம் மாதம் ₹5,550 வரை பெறும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சம் மாதம் ₹1,000 டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகளில் அதிகபட்சம் ₹9 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். அதன்பின், மாதம் ₹5,550 வட்டித்தொகை உங்கள் கணக்கிற்கே வந்து சேரும். முழு விவரங்களை அறிய அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸை அணுகுங்கள். SHARE IT.

News April 14, 2026

மாணிக்கம் தாகூர் பேச்சால் சர்ச்சை

image

காங்., கட்சி பிரமுகர் அழகர்சாமி நாயுடுவின் பேரன் என்பதால், தன்னை எதிர்த்து போட்டியிட்டிருந்தாலும் விஜய பிரபாகரனை ஆதரிக்கிறேன் என மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார். விஜயபிரபாகரனின் ஜாதியை குறிப்பிட்டு அவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஏற்கெனவே, தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக, நாயுடு சமூகத்தை சேர்ந்த 6 பேருக்கு வாய்ப்பு கொடுத்தது விமர்சனத்திற்குள்ளானது.

News April 14, 2026

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்: பாஜக வாக்குறுதி

image

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், *முருகப் பெருமானின் பெருமையைப் போற்ற தைப்பூசத் திருநாள் மாநில விழாவாக கொண்டாட்டம். *தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க தனித்துறை. *முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ₹10 லட்சம் வட்டியில்லா கடன் உள்ளிட்ட <<19646824>>27 முக்கிய வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.

error: Content is protected !!