News December 12, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.46 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) 75 டாலர்கள் அதிகரித்து $4,271 ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News March 31, 2026

தென்காசியில் இதுவரை ரூ.1.03 கோடி பறிமுதல்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 15 முதல் ஒவ்வொரு தொகுதிக்கும் 8 மணி நேரத்துக்கு 3 குழு வீதம் 9 குழுக்கள் என 45 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.அந்தவகையில் தென்காசி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பறக்கும் படையால் ரூ.1.03 கோடி மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்தார்

News March 31, 2026

மது குடிப்போர் வாக்கு எனக்கு வேண்டாம்: சீமான்

image

மது குடிப்போர் வாக்கு தனக்கு வேண்டாம். நல்ல குடிமக்கள் வாக்கு மட்டும் போதும் என சீமான் பேசியுள்ளார். டாஸ்மாக் வருமானம் ₹50,000 கோடி மூலம் திமுக ஆட்சி நடத்துவதாக கூறிய அவர், மது பழக்கத்தால் தமிழ் மக்கள் உழைக்கும் திறனற்றவர்களாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் திமுக போல திருட்டு நிதியில் கட்சி நடத்தவில்லை; மக்களிடம் திரள் நிதி வாங்கி கட்சி நடத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

News March 31, 2026

FLASH: கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

TN-ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இது தொடர்பாக IMD விடுத்துள்ள அறிவிப்பில், மேற்கு விதர்பா முதல் TN வரை காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அதேபோல், குமரிக்கடல் முதல் வடக்கு உள் கர்நாடகா வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNRains<<>>

error: Content is protected !!