News December 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?
Similar News
News December 20, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம், வெள்ளி விலை இந்த வாரத்தில் அதிரடியான மாற்றங்களை சந்தித்துள்ளது. 22 கேரட் தங்கம் முதன்முறையாக 1 சவரன் ₹1 லட்சத்தை கடந்த நிலையில், தற்போது சற்று குறைந்து <<18619763>>₹99,200-க்கு<<>> விற்கப்பட்டு வருகிறது. தொடர் உச்சத்திலேயே நீடிக்கும் வெள்ளி, இந்த வாரத்தில் மட்டும் கிலோவுக்கு ₹16,000 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹216-க்கும், 1 கிலோ ₹2.16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News December 20, 2025
உலகக்கோப்பை அணியில் 2 தமிழர்கள்

<<18621772>>டி20 உலகக்கோப்பைக்கான<<>> இந்திய அணியில் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதே அணிதான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
News December 20, 2025
சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்: நயினார்

திமுக என்றுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது இல்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அன்று முதல் இன்று வரை அதிமுக உடைந்ததால்தான் திமுக வெற்றிபெற்றது என்ற அவர், சென்ற தேர்தலிலும் சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்கால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ₹50,000 கோடி வரை கொள்ளையடித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


