News November 20, 2025

BREAKING: வங்கிகளில் இன்று முதல் இது இயங்காது

image

RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.20) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Similar News

News November 20, 2025

டெல்லிக்கு பயணிப்பதற்கு கூட அச்சமாக உள்ளது: உமர்

image

J&K பதிவெண் கொண்ட வாகனத்தில் டெல்லிக்கு பயணிப்பதற்கு கூட தற்போது அச்சமாக இருப்பதாக அம்மாநில CM உமர் அப்துல்லா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லி கார் குண்டுவெடிப்பிற்கு வெகுசிலரே காரணம், ஆனால் ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் அந்த பழியை சுமப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

ஒரு செல்ஃபியில் பல லட்சம் கோடி!

image

வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஏற்பாடு செய்த விருந்தில், <<18338177>>ரொனால்டோ<<>> நேற்று கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக எலான் மஸ்க், OpenAI இணை நிறுவனர் கிரெக் புரோக்மேன், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. இந்த செல்ஃபியில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடியை தாண்டும்.

News November 20, 2025

BREAKING: விஜய் முக்கிய முடிவு… தொண்டர்கள் மகிழ்ச்சி

image

கரூர் துயருக்கு பிறகு, மீண்டும் விஜய் பரப்புரையை தொடங்கவுள்ளார். டிச.4-ல் சேலத்தில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக தரப்பில் SP-யிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், அனுமதி வழங்குவது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தொடங்கவுள்ள பரப்புரை விஜய்யின் அரசியலை தீவிரப்படுத்துமா?

error: Content is protected !!