News July 11, 2025
BREAKING: ரிதன்யா மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்பூர், அவினாசி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் அவரது தந்தை மற்றும் தாயார் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Similar News
News August 27, 2025
திருப்பூர்: ரூ.24,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

திருப்பூர் மக்களே..,இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில்(BRBNMPL) பிராசஸ் அசிஸ்டெண்ட், மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News August 27, 2025
திருப்பூரில் மின் தடை அறிவிப்பு!

திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்யப்படும் சிலை நீர்நிலைகளுக்கு எடுத்து கரைக்கப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட சாமளாபுரம்குளம், ஆண்டிபாளையம். பி.ஏ.பி வாய்க்கால், பொங்கலூர், எஸ்.வி.புரம் வாய்க்கால்,எஸ்.வி.புரம், பி.ஏ.பி வாய்க்கால், கணியூர் அமராவதி வாய்க்கால், கொடிமேடு ஆகிய பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.(SHARE)