News September 9, 2025
BREAKING: ராணிப்பேட்டை- பாலியல் வழக்கில் 3பேர் கைது

ராணிப்பேட்டை தேங்கா பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான தென்பெண்ணை அருகே காதல் ஜோடிகள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது 3 பேர் அவர்களை வழிமறித்து காதலனைத் தாக்கி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் உறவினர்கள் உதவியுடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் இமயவர்மன் தலைமையில் தனிப்படை அமைத்து 3பேரையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.
Similar News
News March 26, 2026
ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 26, 2026
வாலாஜா டோல்கேட்டில் ரூபாய் 58 ஆயிரம் பறிமுதல்

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று மார்ச் 26 ஆம் தேதி பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 58 ஆயிரம் வைத்திருந்தது தெரிந்தது. பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து வாலாஜா வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
News March 26, 2026
காலணி தொழிற்சாலையில் துண்டு பிரசுரங்கள் தேர்தல் அலுவலர்

புங்கனூர் ஊராட்சியில் உள்ள காலணி தோல் தொழிற்சாலையில் இன்று மார்ச்.26 ஆம் தேதி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


