News March 19, 2026
BREAKING: ரம்ஜான் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

தமிழகம், புதுச்சேரியில் வரும் 21-ம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில அரசுகளின் தலைமை காஜிகளும் அறிவித்துள்ளனர். வழக்கம் போல், இன்று மாலை பிறை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று பிறை தென்படாததால் வரும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 29, 2026
திமுக vs அதிமுக: நேருக்கு நேர் எத்தனை தொகுதிகள்?

திமுக, அதிமுக முழு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. இதன்படி, 2026 தேர்தலில் திமுக – அதிமுக 121 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. உதய சூரியன், இரட்டை இலை சின்னங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்தால், இரு கட்சிகளும் 133 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 15 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடியாக மோதுகின்றன. <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறையா?

1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2023 – 2024 கல்வியாண்டில் கோடை வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 29, 2026
டாப் 5 Chase Masters லிஸ்ட்டில் ஒரேயொரு CSK வீரர்

SRH-க்கு எதிரான சேஸிங்கில் 69 ரன்களை விளாசி RCB அணியை கோலி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் ‘King Chase Masters’ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், டாப் 5 IPL Chase மாஸ்டர்கள் யார் யார், எவ்வளவு ரன்கள் இதுவரை சேஸிங்கில் எடுத்துள்ளனர் என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். இந்த சாதனைகளை யார் முறியடிப்பார்கள்? கமெண்ட் பண்ணுங்க.


