News January 10, 2026
BREAKING: யாருடன் கூட்டணி.. ஓபிஎஸ் புதிய அறிவிப்பு

அதிமுகவில் OPS-க்கான கதவுகளை EPS அடைத்ததால், அவர் தனிக்கட்சி முடிவில் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த OPS-யிடம் தவெகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொறுமையாக இருங்கள்; தை பிறந்தாள் வழி பிறக்கும் என சூசகமாக கூறினார். முன்னதாக TTV, OPS தவெகவுடன் இணைவார்கள் என KAS கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News February 1, 2026
பட்ஜெட்டில் TN-க்கு எந்த பெரிய அறிவிப்பும் இல்லை: விசிக

தேர்தலுக்காக கூட பட்ஜெட்டில் TN-க்கு எந்த பெரிய அறிவிப்பும் இடம்பெறவில்லை என விசிக MP ரவிக்குமார் விமர்சித்துள்ளார். ரயில் வழித்தடம் மேம்பாட்டில் சென்னை – ஹைதராபாத், சென்னை – பெங்களூரு என உள்ளதே தவிர, தமிழ்நாட்டுக்குள் எந்த ரயில்வே திட்டமும் இல்லை எனவும் சாடியுள்ளார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என சொன்ன பாஜக, அதுகுறித்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் கூறியுள்ளார்.
News February 1, 2026
பட்ஜெட்டுக்கு பிறகு வருமான வரி இதுதான்..

2026-27 பட்ஜெட்டில் வருமான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் இல்லை என நிர்மலா தெரிவித்துள்ளார். அதன்படி, ₹4 லட்சம் வரை வரி கிடையாது. ➤₹4 முதல் ₹8 லட்சம் வரை : 5 சதவீதம் ➤₹8 முதல் ₹12 லட்சம் வரை: 10 சதவீதம் ➤₹16 முதல் ₹20 லட்சம் வரை : 20 சதவீதம் ➤₹.20 முதல் ₹24 லட்சம் வரை: 25 சதவீதம் ➤₹24 லட்சத்துக்கு மேல்: 30% வருமான வரி செலுத்த வேண்டும்.
News February 1, 2026
பட்ஜெட் எதிரொலி.. விலை குறையும் பொருள்கள்

*லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால் EV வாகனம், செல்போன், பவர் பேங்க் விலைகள் குறையும். *காலணி மூலப்பொருள்களின் வரி சலுகையால் செருப்பு, ஷூ விலைகள் குறையும். *<<19020441>>கேன்சர், சுகர் உள்ளிட்ட<<>> 17 நோய்களுக்கான மருந்துகளுக்கு இறக்குமதி வரி நீக்கத்தால் அவற்றின் விலை குறைகிறது. *சர்வதேச கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி நீக்கத்தால் இறக்குமதி மீன்களின் விலை குறையும்.


