News December 17, 2025

BREAKING: முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

image

காலநிலை மாற்றம் தொடர்பான இன்றைய நிர்வாகக் குழு கூட்டத்தில், மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை காலநிலை கல்வியறிவு பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 297 பசுமைப் பள்ளிகளில் Cool Roofing திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். பசுமை பள்ளி என்பது மாணவர்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டம் உருவாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த திட்டம் ஆகும்.

Similar News

News March 6, 2026

துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் அலர்ட்!

image

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாய், அபுதாபி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இதனிடையே, துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் குறித்த எச்சரிக்கை செல்போன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. துபாயில் ஏராளமான தமிழர்கள் வசித்துவரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வலுத்துள்ளது.

News March 6, 2026

ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்

image

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவில் இருந்து மீண்ட நிலையில், இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் குறைந்து 78,018-க்கும், நிஃப்டி 314 புள்ளிகள் குறைந்து 24,450-க்கும் வர்த்தகமாகின. ICICI Bank, HDFC, SBI,
Bharti Airtel போன்ற முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம், Reliance, ONGC, Sun Pharma, NTPC நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

News March 6, 2026

எண்ணெய் இறக்குமதிக்கு US ஒப்புதல் தேவையா? CM

image

ரஷ்யாவிடமிருந்து 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில், சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், <<19303157>>ஈரான் கப்பல்<<>> இந்திய கடற்பரப்பிற்கு அருகே தாக்கப்பட்ட விவகாரத்தில் நாம் அமைதி காப்பது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!