News December 8, 2025
BREAKING: முக்கிய அரசியல் தலைவரை சந்திக்கிறார் விஜய்

நாளை புதுச்சேரிக்கு செல்லும் வழியில், பாமக நிறுவனர் ராமதாஸை விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுமா அல்லது நட்சத்திர விடுதியில் நடைபெறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இருவரும் சந்தித்தால் அரசியலில் இதுதான் நாளை ஹாட் டாபிக். முன்னதாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றபோது, விஜய் சந்திக்கவில்லை என்பதை நாசுக்காக ராமதாஸ் கூறியிருந்தார்.
Similar News
News April 11, 2026
ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி, தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு ரஜினி, தனுஷ் வீடுகளிலும் வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, இருவரின் வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால், போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News April 11, 2026
கல்யாணத்துக்கு மறுத்த பெண்ணுக்கு HIV ஊசி

வரன் பார்த்த நபருக்கு HIV தொற்று இருப்பதை அறிந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், திட்டமிட்டு பெண்ணின் உடலில் HIV தொற்று ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர். மேலும், HIV பாதித்த பெண் என்று SM-களில் அவதூறாக பதிவிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News April 11, 2026
ChatGPT ஓனர் வீட்டில் குண்டு வீசி தாக்குதல்

ChatGPT நிறுவன CEO சாம் ஆல்ட்மேனின் சான் பிரான்சிஸ்கோ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், சந்தேகத்துக்குள்ளான 20 வயது இளைஞரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கவலை தெரிவித்த ஆல்ட்மேன், AI-க்கு அதிகரித்து வரும் எதிர்ப்பே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.


