News December 13, 2025

BREAKING: மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. அதனால், கவனமாக இருங்கள் நண்பர்களே!

Similar News

News March 2, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு குட் நியூஸ்

image

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இது எந்த மாதத்தில் இருந்து வரவு வைக்கப்படும் என எதிர்பார்த்து மகளிர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாம். தொடர்ந்து, திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 2, 2026

காங். இன்றி திமுகவுக்கு கஷ்டம்: நிர்மல் குமார்

image

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. மற்றொரு புறம் <<19279246>>ராகுல் காந்தி<<>> தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைக் கூட தாண்ட முடியாது என தவெக நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News March 2, 2026

சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

image

திருச்சியில் அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்குச் சான்றாகும் என சாடியுள்ள தவெக, குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும் மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!