News February 23, 2026

BREAKING: மருத்துவமனை விரைந்தார் CM ஸ்டாலின்

image

சென்னை அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, ஹாஸ்பிடலுக்கு விரைந்த CM ஸ்டாலின், நல்லகண்ணுவின் உடல்நிலை பற்றி விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். முன்னதாக, நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ஹாஸ்பிடல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News February 27, 2026

இன்று இந்தியா வருகிறார் கனடா பிரதமர்!

image

கனடா பிரதமா் மாா்க் காா்னி 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது இருநாடுகளின் உறவு மேம்பாட்டுக்கான செயல்திட்டம் தொடர்பாக PM மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாட உள்ளனர்.

News February 27, 2026

விஜய்க்கு அழைப்பு விடுத்ததா காங்கிரஸ்?

image

கேரளாவில் தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விஜய்க்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் விஜய்க்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால், இதை பயன்படுத்தி அக்கட்சியைத் ஆதரிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனராம். இருப்பினும், இந்த அழைப்பு குறித்த அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் இன்னும் வெளிவரவில்லை.

News February 27, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 27, மாசி 15 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!