News December 5, 2025
BREAKING: மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி

ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சூரி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சூரியின் ஷூட்டிங்கில் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக, X தளத்தில் அவரை டேக் செய்து ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதற்கு, ஷூட்டிங்கில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சூரி குறிப்பிட்டுள்ளார். இனி கவனமுடன் இருக்க சொல்கிறோம், எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம் என சூரி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 29, 2026
விவசாயிகளுக்கு இலவச பம்புசெட்.. புதிய வாக்குறுதி!

இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு விலையில்லா நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், கரும்புக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,500 ஆகவும் நெல்லுக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹3,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹2000- ஆக உயர்த்தப்படும்: ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை CM ஸ்டாலின் வெளியிட்டார். * காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். * மகளிர் உரிமைத்தொகை ₹2000- ஆக உயர்த்தப்படும்.* விவசாயிகளுக்கு எந்த வித மீட்டர்களும் பொருத்தப்படாத நவீன பம்பு செட் வழங்கப்படும் * முதல்வர் காப்பீடு திட்டத்திற்கான ஆண்டு குடும்ப வருமான வரம்பு ₹5 லட்சமாகவும், காப்பீடு தொகை ₹10 லட்சமாகவும் உயர்த்தப்படும்
News March 29, 2026
வங்கி கணக்கில் ₹12,000.. ஸ்டாலின் புதிதாக அறிவித்தார்

திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதில், *மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹8,000-ல் இருந்து ₹12,000 ஆக உயர்த்தப்படும். *மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ₹1,500-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தப்படும். *முதியோர் உதவித்தொகை ₹2,000 ஆக உயர்வு. *மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹5 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.


