News August 20, 2025
BREAKING: மதுரை வந்தடைந்தார் விஜய்!

மதுரை பாரப்பத்தியில் நாளை நடைபெறும் தவெக வின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் மதுரை வந்தடைந்தார். காரின் மூலம் சாலை மார்கமாக புறப்பட்டு மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். தவெக தலைவர் விஜய் இரவு தனியார் ஹோட்டலில் தங்கி நாளை தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறார் .
Similar News
News February 9, 2026
மதுரை மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

1. மதுரை வடக்கு – 0452-2532858
2. மதுரை மேற்கு – 0452-2605300
3. திருப்பரங்குன்றம் – 0452-2482311
4. வாடிப்பட்டி – 04543-254241
5. மதுரை தெற்கு – 0452-2531645
6. மதுரை கிழக்கு – 0452-2422025
7. மேலூா் – 0452-2415222
8. கள்ளிக்குடி – 04549-278889
9. உசிலம்பட்டி – 04552-252189
10. திருமங்கலம் – 04549-280759
11. பேரையூா் – 04549-275677
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.
News February 9, 2026
மதுரை: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ் 22, செல்வம் மகன் பிரவீன் 23 இருவரும் முன்விரோதம் காரணமாக சங்கம் கோட்டையைச் சேர்ந்த முத்தையா என்பவர் வீட்டில் நேற்று பிப்ரவரி 8 அதிகாலை 3 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ், பிரவீனை கைது செய்து குடும்பப் பகையா, மது போதையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 9, 2026
FLASH மதுரை: முகத்தை சிதைத்து கொன்ற கொடூரம்

திருவாதவூர் அருகே உலகுபிச்சன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(31) மாணிக்கம்பட்டி பகுதியில் உள்ள உடைகல் குவாரி பள்ளத்தில் முகத்தில் வெட்டு காயங்களுடன் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெண் தொடர்பு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை தொடர்பாக சிலரை பிடித்து மேலூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.


