News March 7, 2026
BREAKING: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அறிவிப்பு!

மதுரையில் உள்ல உலகபுகழ் பெற்ற மீனாட்சி சுந்தேரஸ்வரர் கோயிலில் வருகிற செப்.17ம் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தப்படுமென அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான சீராய்வு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. என்ன மதுரை மக்களே…! பண்டிகையை கொண்டாடுவோமா?? COMMENT..!
Similar News
News March 9, 2026
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09-03-2026) வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வர்.
News March 9, 2026
மதுரை: கேன்சரால் அவதிப்பட்ட பெண் எடுத்த முடிவு

கூடக்கோவில் அருகே கொம்பாடியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி பாண்டியம்மாள்(45). இவர் கடந்த இரண்டு வருடமாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த இவர் நேற்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மகன் விஜய் அளித்த புகாரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News March 9, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (08.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


