News August 20, 2025
BREAKING: மதுரையில் 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ், பேனர்களை ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மதுரை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட்.21) தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பட வெளியீட்டின் போது வைக்கப்படும் பிரம்மாண்டமான பேனர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன என நீதிபதிகள் கருத்து.
Similar News
News January 29, 2026
மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 29, 2026
மதுரை : இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News January 29, 2026
வயிற்று வலி தாங்காமல் போட்டோகிராபர் தற்கொலை

திருமங்கலம் பாண்டி மகன் அசோக்குமார்(21). இவர் கேஎம் பிளக்ஸ் ஷாப்பில் போட்டோகிராபராக வேலை பார்த்தார். இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. நேற்று தாய் முத்துலட்சுமியிடம் வயிற்று வலிப்பதாக கூறி மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி வர சொல்லி அனுப்பி உள்ளார். அவர் வெளியில் சென்று திரும்பிய போது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


