News December 13, 2025
BREAKING மதுரையில் டிச.17ல் போராட்டம்..!

மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து டிச.17 ம் தேதி, போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.200 கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்தாததை கண்டித்தும், சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
மதுரைக்கு சிறப்பு ரயில்.. இன்று முக்கிய அப்டேட்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை – தாம்பரம் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நெல்லை – சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் (06166) நெல்லையில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4ம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்றடையும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.
News December 18, 2025
மதுரை: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

மதுரை மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 18, 2025
மதுரையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள வேலை வாய்ப்பு தொழிலாளி வழிகாட்டு மையத்திற்கு நேரில் சென்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


