News January 3, 2026
BREAKING: மகிழ்ச்சியான இரண்டு அறிவிப்புகள்

புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதி நாளான இன்று, CM ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரேஷன் அட்டைதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொங்கல் பரிசுத் தொகை குறித்தும் CM ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 22, 2026
ஒரு பெண்ணுக்கு 11 குழந்தைகள் பிறந்தன ❤️❤️

நவீன காலத்தில் பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதே அரிது. ஹரியானாவில் 1 பெண் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதிக்கு முதல் பத்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்ததாம். 19 ஆண்டுகால காத்திருப்புக்கு பின், 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கு ரத்த சோகை இருந்ததால், ஆபத்தான முறையில் பிரசவம் பார்த்தாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
News January 22, 2026
ஆஸ்கர் ரேஸில் இடம்பெறாத ‘ஹோம்பவுண்ட்’

98-வது ஆஸ்கர் விருதுகள் இறுதிப்பட்டியலில் ‘ஹோம்பவுண்ட்’ இடம்பெறவில்லை. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியா பரிந்துரைத்த ‘ஹோம்பவுண்ட்’-க்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடிக்கடி ஜாதி, மத மோதல் நடக்கும் இடத்திலிருந்து தப்பிக்கும் நண்பர்கள் இருவர், சமூகத்தில் உரிய அந்தஸ்து பெற காவலர் தேர்வு எழுதுகின்றனர். அதில், வெற்றி அடைந்தனரா என்பதே ‘ஹோம்பவுண்ட்’.
News January 22, 2026
விடுமுறை.. நாளை முதல் 4 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறை நாள்கள், குடியரசு தினத்தையொட்டி TN முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு ஜன.23, 24-ல் 955 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஜன.26 அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர 800 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.


