News November 1, 2025
BREAKING: மகாதீபம் விடுமுறை.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மகா தீபத்திற்கு தி.மலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இந்தாண்டு டிச.3-ல் விடுமுறை மகா தீபம் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து 4,764 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, தி.மலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வேயும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. SHARE IT
Similar News
News November 2, 2025
ஆந்திரா கோயில் கூட்டநெரிசல் பலிக்கு இதுதான் காரணமா?

<<18168110>>ஆந்திராவில் கூட்டநெரிசல் <<>>ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்த கோயில், தனியாருக்கு சொந்தமானது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் செல்லவும், வெளியேறவும் ஒரே வழி மட்டும் இருந்ததும், ஒரே நேரத்தில் 25,000 பேர் கூடியதும் தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறியுள்ளது. மேலும், கூட்டத்திற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
News November 2, 2025
ராசி பலன்கள் (02.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 2, 2025
திராணி இருந்தால் EPS-ஐ கைது செய்யுங்கள்: EX அமைச்சர்

கொடநாடு கொலையில் EPS குற்றவாளி என்றால் போலீஸ் என்ன செய்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, EPS-ஐ ஜெயிலில் போட வேண்டியதுதானே எனவும், திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், EPS CM-ஆவது தெய்வத்தின் தீர்ப்பு எனவும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் CM கனவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


