News December 31, 2025

BREAKING: பொங்கல் பரிசை அறிவித்தது தமிழக அரசு

image

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

Similar News

News January 2, 2026

கூட்டணி பேச்சுவார்த்தையில் SDPI மும்முரம்

image

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த SDPI, அக்கட்சி NDA-வில் இணைந்ததால் கூட்டணியில் இருந்து விலகியது. இந்நிலையில், 2026 தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். SDPI அகில இந்திய மாநாட்டுக்கு (ஜன.20) பின் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், ஆட்சியில் பங்கு என்ற எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

News January 2, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $19.68 அதிகரித்து $4,348.28-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $1.24 அதிகரித்துள்ளது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையில் தங்கம் விலை மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 2, 2026

நியூ இயர் Resolution.. நேத்து யாரெல்லாம் Follow பண்ணீங்க

image

காலையில் சீக்கிரமாக எழுவேன், ஜிம் போவேன், மது- சிகரெட்டை கைவிடுவேன், இனி Life-ல் productive ஆக இருப்பேன் என புத்தாண்டிற்கு முன்பு பல Resolution-களை எடுத்திருப்பீர்கள். ஆண்டின் முதல்நாள் கடந்தாகி விட்டது. எடுத்த Resolution-ஐ நேற்று ஒருநாள் யாரெல்லாம் கரெக்ட்டா பண்ணீங்க. அப்படி இல்லாம யார் பொங்கல் வரைக்கும் லீவு விட்டுடீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!