News December 29, 2025
BREAKING: பொங்கல் பரிசு ₹5,000.. வாக்குறுதி அளித்தார்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கப்படும் என EPS உறுதியளித்துள்ளார். 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பை TN அரசு தற்போது வரை அறிவிக்காத நிலையில், EPS, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய தேர்தல் வாக்குறுதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 பொங்கலுக்கு வழங்கப்படும் என EPS கூறியுள்ளார்.
Similar News
News February 6, 2026
தவெகவின் இணையதளம் முடங்கியது!

தேர்தல் அறிக்கையில் மக்களின் பரிந்துரைகளை பதிவு செய்வதற்காக தவெக வெளியிட்ட இணையதளம் அடுத்த சில மணி நேரங்களிலேயே முடங்கியது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் இணையதளத்தை அணுகியதால் ஸ்தம்பித்ததாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கும் வகையில் tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.
News February 6, 2026
ராசி பலன்கள் (06.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 6, 2026
பறவை காய்ச்சல்.. இதெல்லாம் பண்ணாதீங்க!

தமிழகத்தில் <<19056428>>பறவைக் காய்ச்சல்<<>> பரவி வருவதன் எதிரொலியாக, அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகியவை பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சிகளை தவிர்க்குமாறும், பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


