News December 13, 2025

BREAKING: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. அமைச்சர் அறிவிப்பு

image

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். ஒரு கரும்பின் கொள்முதல் விலை எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணை வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி, பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களின் விவரங்கள், ரொக்கம் எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்களும் இம்மாத இறுதியில் வெளியாகலாம்.

Similar News

News March 3, 2026

CINEMA 360°: தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீஸ்

image

*தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு *வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது *’ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்’ படத்தில் நடித்த டாம் ஹோலண்ட்- ஜெண்டயா திருமணம் செய்து கொண்டதாக தகவல் கசிந்துள்ளது *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள RAI RAI RAA RAA பாடல் வெளியானது

News March 3, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 3, 2026

ஈரானுக்கு ஆதரவு கையை நீட்டிய சீனா

image

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு உள்ள நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் குறித்து சீனா வாய் திறக்காதது சர்வதேச கவனம் பெற்றது. இந்நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. போர் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!