News January 7, 2026

BREAKING: பொங்கல் பணம்.. கடைசி நேரத்தில் அறிவிப்பு

image

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் ₹3000 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், கடைசி நேரத்தில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆம்! CM தொடங்கி வைத்த உடனே, மாநிலம் முழுவதும் டோக்கனில் நாளை (8-ம் தேதி) என குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம்!

image

கடலூரில் இன்று 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கடலூர் மாவட்ட 117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்வில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

News January 26, 2026

USA-வில் நுழைய முயன்ற 24,000 இந்தியர்கள் கைது

image

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதில் இந்தியர்களும் சளைத்தவர்கள் இல்லை. கடந்த ஆண்டில் மட்டும் இப்படி நுழைய முயன்ற 23,830 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். அதாவது 2025-ல் சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு இந்தியர் அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். 2024-ல் இது 85,119 ஆக இருந்த நிலையில், டிரம்ப்பின் கடும் நடவடிக்கையால் குறைந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வேலைத் தேடி சென்றவர்கள் தான்.

News January 26, 2026

மதுரை வடக்கில் DMK-க்கு பதில் காங்., போட்டியிட வேண்டும்

image

திமுக இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது என மதுரை வடக்கு தொகுதி MLA தளபதி கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, 2026-ல் மதுரை வடக்கு தொகுதியில் காங்., போட்டியிட கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன் என்று X-ல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!