News January 10, 2026
BREAKING: பொங்கலுக்கு ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ்?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, பட தயாரிப்பு நிறுவனம் SC-யில் மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடத்தும் SC, சென்சார் கொடுக்க உத்தரவு பிறப்பித்தால், பொங்கலுக்கு படத்தை வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 5, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI முக்கிய ஆலோசனை

தமிழகம், அசாம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள 1,444 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறும் கூட்டத்தை அடுத்து தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 5, 2026
போராட்டத்தை அறிவித்தார் EPS

டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் பிப்.11-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும் என EPS அறிவித்துள்ளார். பணி நிரந்தரம், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தங்கமணி தலைமையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
வங்கி கடன் தள்ளுபடி.. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தேர்தலையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் <<19053905>>கடன் தள்ளுபடி<<>> உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை EPS வெளியிட்டுள்ளார். இதனிடையே, தள்ளுபடி கிடைக்குமென எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2025 ஏப்ரல் – டிசம்பர் வரை ₹11,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திமுக தரப்பிலும் கடன் தள்ளுபடி தொடர்பான தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.


