News January 12, 2026
BREAKING: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை! அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போகி அன்றும் (ஜன.14) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.15 முதல் ஜன.17 வரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஒருநாள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
உதடு இப்படி இருக்கா? அப்போ அசால்ட்டா இருக்காதீங்க!

குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போவதும், வெடிப்புகள் ஏற்படுவதும் பொதுவானது. ஆனால் உடலை நன்கு நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டு, லிப் பாம்களை பயன்படுத்தியும், உதடு வெடிப்புடன் இருக்கிறதா? அப்படி இருந்தால் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என அர்த்தம். அத்துடன் கால் வீக்கம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளையும் சந்தித்தால், இதய ஆரோக்கியம் மோசமாக உள்ளதற்கான அறிகுறி என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News February 9, 2026
படுத்த படுக்கையாக இருந்த நடிகை முமைத் கான்

2016-ல் நிகழ்ந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு 15 நாள்கள் கோமாவில் இருந்ததாக நடிகை முமைத் கான் வருத்தத்துடன் கூறியுள்ளார். ‘என் செல்ல பேரு ஆப்பிள்’ பாடலில் விஜய்யுடன் கலக்கிய இவர், கோமாவுக்கு பிறகு 8 ஆண்டுகள் செயலிழந்து இருந்ததாகவும் வேதனைப்பட தெரிவித்துள்ளார். தற்போது ஓரிரு படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறிய அவர், இனி முடிந்ததை செய்யலாம் என சினிமாவுக்கு மீண்டும் வந்துள்ளேன் என்றார்.
News February 9, 2026
நேதாஜி படை வீரரை சந்தித்த PM மோடி உருக்கம்!

தனது மலேசிய சுற்றுப்பயணத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (INA) பணியாற்றிய ஜெயராஜ் ராஜாராவை நேரில் சந்தித்ததை PM மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ராஜாராவின் வாழ்க்கை ஆழ்ந்த துணிச்சலும், தியாகமும் நிறைந்தது; அவரது அனுபவங்கள் உத்வேகம் அளித்தது என்று தெரிவித்துள்ளார். நேதாஜிக்கும், INA வீரர்களுக்கும் இந்தியா எப்போதும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவரிடம் கூறியுள்ளார்.


