News November 27, 2025
BREAKING: புயல் உருவானது.. பேய் மழை வெளுக்கும்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக வலுப்பெற்றிருப்பதாக IMD அறிவித்துள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே திசையில் சுமார் 700 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிட்வா புயல் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திற்கு 2 நாள்கள் <<18402600>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
RCB-யை தொடர்ந்து ஏலத்திற்கு வரும் RR?

RCB அணியின் உரிமை கைமாறவுள்ளது அறிந்த செய்தியே. அந்த அணியை வாங்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது RR அணியும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்னும் RR அணியின் உரிமம் கைமாறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
News November 28, 2025
ரெட் அலர்ட்: 14 மாவட்டங்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, <<18379714>>ரெட் அலர்ட்<<>>, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்
News November 28, 2025
வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடக்கம்

இரட்டை வரி விதிப்பு விவகாரம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில், பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு இன்று மாலையில் இருந்து பஸ் சேவை இயக்கப்படும் என ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


