News November 23, 2025
BREAKING: புயல் உருவாகிறது.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று IMD அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு UAE பரிந்துரைத்த ‘சென்யார்’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
Similar News
News January 30, 2026
நுரையீரல் இன்றி 48 மணிநேரம் உயிர்பிழைத்த அதிசய மனிதர்!

நுரையீரல்கள் இல்லாமலேயே 48 மணி நேரம் ஒருவர் உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. US-ல் 33 வயதான இளைஞரின் நுரையீரல்கள் கடும் சுவாசக் கோளாறு காரணமாக சேதமடைந்ததால், டாக்டர்கள் அதனை அகற்றினர். பின்னர் 48 மணி நேரத்திற்குப் பிறகு, உறுப்பு தானம் செய்பவர் கிடைத்ததையடுத்து, வெற்றிகரமாக அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அந்நபர் நலமுடன் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த நிதிஷ் குமார்

பிகாரில் அரசு ஊழியர்களின் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில், பொது ஊழியர் நடத்தை (திருத்தம்) விதிகள் 2026-க்கு நிதிஷ் குமார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் தொடங்குவதற்கு முன்பு தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெறவும், புனைப்பெயரில் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பது தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
ஜனவரி 30: வரலாற்றில் இன்று

1948 – நாதுராம் கோட்சேவால் தேசப்பிதா மகாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டார். 1976 – தமிழ்நாட்டில் கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது. 2020 – COVID-19ஐ உலக சுகாதார நிறுவனம் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. 1950 – முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி பிறந்த தினம். 1874 – ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் நினைவு தினம்.


