News November 24, 2025
BREAKING புதுச்சேரிக்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
புதுச்சேரி முதல்மைச்சர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,, பார்வையற்றோருக்கான மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது. இன்னும் பல புகழ்பெற்ற தருணங்கள் வரவும், தொடர்ந்து வரலாற்றைப் படைத்துக்கொண்டே இருக்கவும், இந்திய அணிக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
News November 24, 2025
காரைக்கால்: வாகன ஓட்டிகளுக்கு ரூ.10,000 அபராதம்

காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா உத்திரவின்பேரில் நேற்று இரவு போக்குவரத்து போலீசார் நகரின், பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் ‘பிரீத் அனலைசர்’ கருவி மூலம் வாகன ஓட்டிகளை சோதனை செய்தனர். அப்போது 9 பேர் மது போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
News November 24, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 334
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி:14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


