News November 24, 2025
BREAKING: புதுகை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கேபின் க்ருவ்” விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படையில் பல்வேறு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்பும் வழங்க உள்ளது. இதில் 18 முதல் 23 வயது வரை உள்ள +2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு செய்ய கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
News November 24, 2025
புதுகை: கார் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்தவர் ஜெகன் எபினேஷ். இவரது தாய் சாந்தி, எபினேஷ் இருவரும் காரில் குடுமியான்மலையில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி உள்ளனர். அப்போது கார் அண்ணாபண்ணை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஜெகன் எபினேஷ், இவரது தாய் இருவரும் படுகாயம் அடைந்தனர்.